விஷால் மீதான புகாரில் இரண்டாம் கட்ட விசாரணை....!!!

This cinema news gives information about the second trial in vishals complaint - vishaal meethaana pugaaril irandaam katta visaaranai

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீதான புகாரில் இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் முறைகேடுகள் செய்ததாகக் கூறி, சங்க கட்டிடத்துக்கு தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தரப்பிலான அணியினர் பூட்டுப் போட்டனர். விஷால் மீது வழக்கு தொடர்ந்ததை அடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுப் படி ராயப்பேட்டை ஆர்.டி.ஓ சேகர் தலைமையில் இன்று 2ம் கட்ட விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில், சங்க செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு, விஷால் தலைமையேற்ற பிறகிலான வரவு, செலவு ஆவணங்களை ஆர்.டி.ஓ.விடம் வழங்கினர்.