நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு... ஷாருக்கானின் மிரட்டல் அதிரடி ஆக்சன் கொண்ட பதான் டீசர் இதோ...

பாலிவுட் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர் என்றால் ஷாருக்கான் என்று கூறலாம். பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஷாருக்கான்

பாலிவுட் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் வைத்திருக்கும் நடிகர் என்றால் ஷாருக்கான் என்று கூறலாம். பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஷாருக்கான் இன்று 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களுக்கு மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

Happy Birthday Shah Rukh Khan [Image Source: Twitter]

அவருக்கு பிறந்த நாள் பரிசு கொடுக்கும் வகையில், அவர் நடித்து வரும்  “பதான்” திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் வரும் ஆக்சன் காட்சிகள் மற்றும் பின்னணி இசை காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதைபோல் ஷாருக்கானின் லுக்கும் மிரட்டலாக இருக்கிறது.

இதையும் படியுங்களேன்-மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…. கடும் வருத்தத்தில் பார்த்திபன்.!

unknown node

Pathaan Teaser [Image Source: Twitter]

ஹிந்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

unknown node

Pathaan Teaser [Image Source: Twitter]

மேலும், இந்த திரைப்படத்தில் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோனே, டிம்பிள் கபாடியா, அசுதோஷ் ராணா போன்ற பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் தத்லானி, சேகர் ரவ்ஜியானி ஆகியோர் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node