ருத்ரன் படத்தின் தரமான அப்டேட்.... லாரன்ஸுக்கு வில்லனாகும் சரத்குமார்..?

It has been reported that Sarathkumar will play the villain for actor Lawrence in the upcoming Rudran movie directed by Lawrence.

ருதரன் படத்தில் நடிகர் லாரன்ஸுக்கு வில்லனாக சரத்குமார் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ருத்ரன் என்ற திரைப்படத்தில் அவரே இயக்கி அவரே நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். லாரன்ஷிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பை விரைவில் முடித்து விட்டு படத்தை ஜூன் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பதாக படக்குழு அன்மையில் அறிவித்தனர். இதனை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மட்டும் அதிகமாகாமல் சரத்குமார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கபோகிறார் என்ற கேள்வி எழுந்துவருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் நடிகர் சரத்குமார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கபோகிறார் என்பதை குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் நடிகர் லாரன்ஸுக்கு வில்லனாக வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.