வெளியாகியது சந்தானத்தின் அட்டகாசமான "டிக்கிலோனா" ட்ரைலர்...!

Fans are all excited as the trailer for the Santhanam starrer Tikilona has been released.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்துக்கான ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.

இயக்குனர் கார்த்திக் யோகி அவர்களது இயக்கத்தில் நடிகர் சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், அனகா, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துவரும் தமிழ் திரைப்படம் தான் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை, KJR ஸ்டுடியோ தயாரித்து வழங்குகிறது.

காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாக உள்ளது. தற்பொழுதும் இந்த படத்துக்கான ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்ரைலர் வீடியோவில் மூன்று தோற்றத்தில் நடிகர் சந்தானம் உள்ளது போல காண்பிக்கப்பட்டுள்ளது. படம் முழுவதும் காமெடி நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதோ அந்த அட்டகாசமான ட்ரைலர் வீடியோ,

unknown node