அடுத்த ரம்ஜானுக்கு சம்பவம் இருக்கு...முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்...டைட்டில் ரிலீஸ்.!

Sikandar: நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு 'சிகந்தர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Salman Khan - Sikandar

Sikandar:நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘சிகந்தர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தாம் நடிக்கவுள்ள பட பெயரை இந்தி நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ளார். ரமலான் பண்டிகையையொட்டி, வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ள அவர், போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

நடிகர் சல்மான் கான் கடைசியாக ‘டைகர் 3’ படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் தாம் நடிப்பதாகவும், படத்தின் பெயர் சிக்கந்தர் என்றும், அந்த படம் 2025 ரமலான் பண்டிகையின்போது வெளியாகும் என்றும் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

unknown node

இந்தப் படம் 2025ஆம் ஆண்டு ஈத் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து கூடுதல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தமிழில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய ‘கஜினி’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் அமீர்கான் நடித்திருந்தார், படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 100 கோடி வசூல் செய்தது.

இதனை தொடர்ந்து இரண்டாவது படமாக அவர் அக்‌ஷய் குமாரின் ‘ஹாலிடே: எ சோல்ஜர் இஸ் நெவர் ஆஃப் டூட்டி’ படத்தையும் இயக்கினார். இபொழுது, சல்மான் கானை வைத்து இயக்க போகும் சிகந்தர் திரைப்படம் மூன்றாவது பாலிவுட் படமாகும்.