பிரபல நடிகரின் தெலுங்கு படத்தில் இருந்து விலகிய சாயிஷா!

It has been reported that Chaisa has left the film due to some personal reasons. Saiyasha withdraws from famous actor's Telugu film.

பிரபல தெலுங்கு திரையுலக சீனியர் நடிகரான பாலகிருஷ்ணன் அவர்களின் படத்திலிருந்து சில தனிப்பட்ட காரணங்களால் சாயிசா விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சீனு அவர்கள் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணன் அவர்கள் நடித்து வரக்கூடிய புதிய திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகிக்கொண்டுள்ளது. இந்த திரைப் படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களில் ஒருவர் சாயிசா என இரண்டு வாரங்களுக்கு முன்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சாயிசா இவ்வளவு பிரபலம் ஆன நடிகருடன் நடிக்கிறாரா எனவும் ஆச்சரியமாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது சில தனிப்பட்ட காரணங்களால் சாயிஷா இந்த படத்தில் நடிக்க முடியாது என விலகியுள்ளதாக அதிர்ச்சியான தகவல் டோலிவுட் வட்டாரங்களில் தற்பொழுது பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அதற்கு பதிலாக தெலுங்கு படங்களில் ஏற்கனவே நடித்துள்ள நாயகியாகிய பிரக்யா ஜெய்ஸ்வால் அவர்கள் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகை பூர்ணா அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.