பூஜா கண்ணன் நிச்சயதார்த்தம்! சாய் பல்லவி நடனம்..வைரலாகும் புகைப்படங்கள் வீடியோக்கள்!

Poojakannan engagement function

நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் வினீத் என்பவரை கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பே இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

Pooja Kannan
Pooja Kannan / @RAMESHMEGH84177

தகவலை தொடர்ந்து பூஜா கண்ணன் தனது சமூக வலைதள பக்கங்களில் இரண்டு நாட்களுக்கு முன்பு மெஹந்தி போட்டிருந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது தனக்கு நிச்சயதார்த்தம்  என்பதை அறிவித்தார்.

அரசியல் பேசுனா என்ன தப்பு? கீர்த்தி பாண்டியன் பேச்சு!

Poojakannan engagement function
Poojakannan engagement function / @RAMESHMEGH84177

இதன் பின் பூஜா கண்ணன் மற்றும் வினீத் ஆகியோருடைய திருமண நிச்சியதார்த்த விழா சமீபத்தில்  நடைபெற்றது. இருவருடைய குடும்பமும் பேசி இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்துள்ளனர்.

Poojakannan engagement function
Poojakannan engagement function / @RAMESHMEGH84177

எனவே, தங்களுடைய குடும்பத்தாரின் முன்னிலையில், இருவரும் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய நிச்சயதார்த்த விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

Poojakannan engagement function
Poojakannan engagement function / @RAMESHMEGH84177

வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வினீத் –  பூஜா கண்ணன் ஜோடிக்கு  தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

sai pallavi and pooja kannan
sai pallavi and pooja kannan / @GoldwinSharon

சாய்பல்லவி நன்றாக நடனம் ஆட கூடிய ஒரு நடிகை எனவே தனது தங்கையின் நிச்சியதார்த்த விழாவில் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக கூட்டமாக நடனமும் ஆடி இருக்கிறார். அதற்கான வீடியோவும் வைரலாகி வருகிறது.

மேலும், பூஜா கண்ணன் ஸ்டண்ட் சில்வாவின் இயக்கத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘ சித்திரை செவ்வானம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்