உங்க கிரிமினல் தனத்தால் உண்மைகள் வெளிவரப்போகிறது! ஞானவேல் ராஜாவை எச்சரித்த எஸ்.ஆர்.பிரபாகரன்!

sr prabhakaran about paruthiveeranissue

ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசிய விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், பலரும் இன்னும் அமீருக்கு ஆதரவாக பேசி அறிக்கை வெளியீட்டு கொண்டு வருகிறார்கள். அமீர் பற்றி பேசியதற்கு ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை வெளியீட்டு இருந்தாலும் கூட அவர் சரியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் அறிக்கை வெளியீட்டு இருந்தார்கள்.

அப்படி இருந்தும் இன்னும் இந்த விவகாரம் தொடர்பாக ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்காமல் இருந்து வருகிறார். இதனால் பலரும் இன்னும் இந்த விவகாரத்தை விடாமல் அறிக்கை வெளியீட்டு கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், பிரபல இயக்குனரான எஸ்.ஆர்.பிரபாகரன் காட்டத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியிருப்பதாவது ” கடந்த 17 ஆண்டுகளாக அமீர் அவர்கள் மீது நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி – அமீர் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது நீங்கள் ( ஞானவேல்) திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலையும் தரவில்லை ஆனால். அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல- முன்னால் நிற்கிறது. அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் அவர்கள்-எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட பெரும் படைப்பாளி என்று எல்லாருக்கும் தெரியும்.

நான் பெற விரும்புவது யாசகம் அல்ல என்னுடைய உரிமையை! இயக்குனர் அமீர் அறிக்கை!

மௌனம் பேசியதே ராம் பருத்திவீரன் ஆகிய மூன்று படைப்புகளுமே போதும் அமீர் அவர்களை – இன்னொரு பாரதிராஜா-வாக ஏற்றுக்கொள்ள எனத்தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து அவருக்கு அதரவாக எல்லோரையும் உண்மை பேச வைத்து அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக, உங்களுக்கு பெரும் நன்றி.

உண்மை என்று நீங்கள் ஏதேதோ பேசினீர்களே இப்போது நான் உண்மை பேச ஆரம்பிக்கட்டா? அரசியல் பின்புலம் கொண்ட ஒருவரிடம் இருந்து பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாக கூறி 100 கோடி வாங்கிக்கொண்டு அதன்பிறகு மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக ஒரு செய்தி இருக்கிறது அதனை பற்றி இப்போது பேசுவோமா? அல்லது உங்களின் உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா ?

உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களை பற்றிய உண்மைகள் வெளிவரப்போகிறது இதற்கு ஓரே தீர்வு நீங்கள் பேட்டியோ மன்னிப்பு கேட்டு எழுதும் கடிதமோ அல்ல, நீதி மன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு, இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக்கொள்ளாமல் 17 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பணத்தை ஏமாற்றீனீர்களோ அதன் இன்றைய மதிப்பு என்னவோ அதை அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து. இந்த பிரச்சனையை-நீங்கள் முடித்து கொள்வதுதான்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்