ருத்ரன் படத்தின் தாறுமாறான லேட்டஸ்ட் அப்டேட்..!!

Preliminary shooting for the upcoming film Rudran starring Raghava Lawrence has been completed.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ருத்ரன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி தயாரித்து வருகிறார். லாரன்ஷிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. எடுத்த வரை காட்சியை பார்த்த படக்குழுவினர் படம் அருமையாக இருப்பதாக கூறியுள்ளார்கள். மேலும் இந்த படத்தை வருகின்ற ஜூன் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.