அஜித் சார் இளைஞர்களுக்கு Role model – சேரன் ட்வீட்..!

Director Cheran congratulates Ajith on winning the gold medal in the sniper competition.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அஜித்திற்க்கு இயக்குனர் சேரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 900க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் தங்கம் பதக்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றார். இதற்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

unknown node

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாடு வரையிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார்.எம்.ஐ.டி யில் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான வகுப்பில் சிறப்பு அட்வைஸர். சினிமாவில் நடிகனாக மட்டுமில்லாமல் தனது மற்ற திறமைகளை வெளிக்கொணரும் அஜித் சார் பாராட்டுக்குரிய ஒரு Role model.இளைஞர்களுக்கு. என்று தெரிவித்துள்ளார்.