‘ராக்கெட்ரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவன் நடித்துள்ள ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மேடி என்று அன்புடன் அழைக்கப்படுபவர் மாதவன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் நிசப்தம் மற்றும் மாறா ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

unknown node

மாதவன் தற்போது ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’ எனும் படத்தினை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படமானது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

unknown node

மேலும், இந்த திரைப்படத்தில் தமிழ் பதிப்பில் பத்திரிகையாளராக சூர்யா கெஸ்ட் ரோலிலும், இந்தி பதிப்பில் அந்த வேடத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார்கள். பிரமாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.

unknown node

இந்நிலையில், தற்போது இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node