திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் வீராங்கனை கோமதி மாரிமுத்து. இவர் ஆசிய தடகள போட்டியில், இந்தியாவுக்கு தங்க பதக்கத்தை பெற்று கொடுத்து, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், கோமதி மாரிமுத்துக்கு பல தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, இவருக்கு, நகைசுவை நடிகரான ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார்.