மலையாள திரையுலகில் பிச்சு திருமலா என அறியப்படும் பி.சிவசங்கரன் என்கிற பிரபல பாடலாசிரியர் இன்று இம்மண்ணுலகை விட்டு பிரிந்தார். இவருக்கு வயது 80.
1972இல் மலையாள திரையுலகில் அறிமுகமானார். 1970’s முதல் 1990’s வரையில் மலையாள சினிமா உலகில் பாடலாசிரியாக பணியாற்றியுள்ளார். மலையாள பிரபல இசையமைப்பாளர் முதல் நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வரையில் பலரின் இசைக்கு இவர் வரிகள் எழுதியுள்ளார்.
unknown nodeஇவர் கடந்த புதன் கிழமை அன்று மாரடைப்பால் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது. இன்று (வெள்ளிக்கிழமை ) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள கவர்னர் என அரசியல் தலைவர்கள் உட்பட, பல்வேறு திரைபிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.