ரியோ... ரியோ ராஜ்... என்ன பிக் பாஸ் திருட்டுத்தனமாக கூப்பிடுறீங்க!

As he prepares to go to sleep, Big Boss calls Rio in a soft voice as Rio, Rio Raj, and explains to him about today's task.

தூங்குவதற்கு தயாராகிய ரியோவை ரியோ, ரியோ ராஜ் என மெல்லிய குரலில் பிக்பாஸ் கூப்பிடுகிறார், இன்றைய டாஸ்க் குறித்தும் அவரிடம் விளக்கமளிக்கிறார்.

கடந்த 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. நேற்று இரு வித்தியாசமான போட்டிகள் நடைபெற்று அதில் பாலா மற்றும் ரம்யா வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் இன்றும் போட்டிகள் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் நடைபெறும் போட்டிகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய போட்டியாளர்கள் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார்கள்.

இந்நிலையில், ரியோ படுப்பதற்காக தலைசாய்க்கும் பொழுது ரியோ ராஜ், ரியோ என மெல்லிய குரலில் பிக்பாஸ் அழைக்கிறார். அதன்பின் போட்டிகள் குறித்து கூறி இன்றைக்கான போட்டி நடைபெறுகிறது. அதிலும் பாலாவுக்கு கேபிக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்படுகிறது. யார் ஜெயிக்கிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம். இதோ அந்த வீடியோ,

unknown node