மீண்டும் இணையும் கொம்பன் கூட்டணி..!! கொம்பன் 2...??

It has been reported that Karthi's 23rd film is the second part of the Komban film

கார்த்தியின் 23 வது படம் கொம்பன் படத்தின் இரண்டாவது பாகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக தனது 23 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை குட்டி புலி, கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி படத்தை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்குவது கிட்ட தட்ட உறுதியாகி விட்டதாகவும் அந்த திரைப்படம் கண்டிப்பாக கொம்பன் படத்தின் இரண்டாவது பாகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2D தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்க வுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணையும் கொம்பன் கூட்டணி..!! கொம்பன் 2...??