இந்த காரணத்துக்காக தான் வர மாட்டேன்.! மரியாதை ரெம்ப முக்கியம்.! நயன்தாரா ஓபன் டாக்.!

நடிகை நயன்தாரா பொதுவாக தான் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவே மாட்டார். சமீபகாலமாக தான் படத்திற்கான

நடிகை நயன்தாரா பொதுவாக தான் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவே மாட்டார். சமீபகாலமாக தான் படத்திற்கான ப்ரோமோஷனுக்காக பேட்டிகொடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் நடித்துமுடித்துள்ள கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

unknown node

Nayanthara interview [Image Source: Twitter ]

அந்த பேட்டியை தொகுப்பாளினி டிடி தான் தொகுத்து வழங்கினார். அந்த பேட்டியில் நயன்தாராவிடம் டிடி ” எதற்காக நீங்கள் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறீர்கள்..? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த நயன்தாரா ” நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகிகளுக்கு முக்கியம் துவம் குடுக்கும் படங்கள் வரவில்லை.

இதையும் படியுங்களேன்-இந்திய அளவில் டாப் 10 லிஸ்ட்… பிரமாண்ட சாதனையில் இடம் பிடித்த 2 தமிழ்ப்படங்கள்.?

unknown node

Nayanthara Sad [Image Source: Twitter ]

அப்போது எனக்கு தோணும்..எதற்காக ஹீரோயின்களுக்கு மட்டும் முக்கிய துவம் இல்லாமல் இருக்கு,ஒரு இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றால் கூட, அந்த சமயத்தில் எங்கயாவது ஓரமாக நிக்க வைத்துவிடுவார்கள். எந்த விதத்திலும் ஹீரோயின்களுக்கு மதிப்பும், முக்கியத்துவம் இருக்காது. எனவே ஒரு நல்ல இடத்திற்கு வந்த பிறகு அந்த மாதிரி ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நாம் கலந்து கொள்ளலாம் என நினைத்திருக்கிறேன்.

unknown node

LadySuperStar Nayanthara [Image Source: Twitter ]

ஆனால், அதன்பிறகும் கூட நான் அதை செய்யவில்லை. அது வேற விஷயம் சில. அப்போது தான் நினைத்தது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் பல படங்கள் வரவேண்டும், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவேண்டும் என்று நினைத்ததுண்டு. இப்போது பல படங்கள் அப்படி வருகிறது. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது”. என பேசியுள்ளார் நடிகை நயன்தாரா. மேலும் நயன்தாரா நடித்துள்ள இந்த “கனெக்ட் ” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node