நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தினை ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில், படத்தின் முதல் சிங்கிளான “கில்லர் கில்லர்” பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை கபேர் வாசுகி எழுதி, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து, தனுஷ் பாடியுள்ளார். அந்த பாடலை தொடர்ந்து தற்பொழுது, படத்தின் 2-வது பாடலான “உன் ஒளியிலே” இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.
unknown node90 காலகட்டத்தை பின்னணியாக கொண்ட பீரியாட்டிக் கதையை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
சலார் திரைப்பட நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
இதற்கிடையில், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஷ்வரனும் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணையவுள்ளனர் என்றும், இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
