அவதார்-2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Default Image

செஞ்சுரி பாக்ஸ் வெளியிட்ட, ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படமானது கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படம் வெளியாகி உலக அளவில் அதிக வசூலை வசூலித்து சாதனைப் படைத்திருந்தது.

இந்நிலையில், இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் தாமதமாகிக் கொண்டே இருந்தது. இதனையடுத்து டிஸ்னி நிறுவனம் அவதார்-2 குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என்று டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்