இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படம் சிம்புவின் 47-வது படம். படத்தில் தாமரை பாடல்கள் எழுதுகிறார். டத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
unknown nodeஇந்த படத்தின் மூலம் சிம்பு -கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள்ளதால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீதுள்ள எதிர்பார்பு அதிகமாகியுள்ளது.
unknown nodeவித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதுவரை இல்லாத விதமாக சிம்பு வித்தியாசமான தோற்றத்தில் இருந்ததால், படம் எப்படி பட்ட படம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
unknown nodeஇந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவும் என்று வேல்ஸ் நிறுவனம் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
unknown node