பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

பிரபாஸ் நடிக்கும்'ஆதிபுருஷ்'படத்தினை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் நடிக்கும்’ஆதிபுருஷ்’படத்தினை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்ஹாஜி எனும் படத்தின் மூலம் பிரபலமான ஓம் ராவத் , சமீபத்தில் பிரபாஸ் அவர்களை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. ‘ஆதிபுருஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

மேலும் பூஷண் குமார் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது . மேலும் ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணம் கதையை தழுவி படமாக்க உள்ளதாகவும் ,அதில் பிரபாஸ் ராமனாகவும் , சைஃப் அலிகான் ராவணனாகவும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது .

இந்த படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு தொடங்கி 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது . இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் அறிவித்துள்ளார். ஆதிபுருஷ் படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் .  நடிகர் பிரபாஸ் தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

unknown node