மறைந்த நடிகை சித்ராவின் "கால்ஸ்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

The official announcement has been made that the movie Calls starring actress Chitra will be released in theaters on February 26.

நடிகை சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள கால்ஸ் திரைப்படம் பிப்ரவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் ஹேமந்த் என்பவரை திருமணம் செய்திருந்தார். தன் கணவருடன் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது.

இந்த நிலையில், சித்ரா நடித்த முதல் திரைப்படம் “கால்ஸ்”. இந்த படத்தில் சித்ரா கனவுகள் நிறைந்த தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.திரைப்பட கல்லூரியில் பயின்று வரும் மாணவரான ஜே.சபரீஷ் என்பவர் இந்த படத்தினை இயக்குகிறார்.மேலும் காவிரி செல்வி மற்றும் ஜெயக்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆர்.சுந்தராஜன் ,வினோதினி , ஸ்ரீரஞ்சனி மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், டிரைலர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர், ஆம் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

unknown node