விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் வருகின்ற மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.அதில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’.அதனை சிரிஷ் மற்றும் பாபி சிம்ஹா நடித்து சூப்பர் ஹிட்டான மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார் .நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தினை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள், டிரைலர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், இந்த திரைப்படம் வருகின்ற மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
unknown node