ரீலிஸ் ஆனது தல அஜித்தின் அடிச்சித்தூக்கி பாடல் ப்ரோமோ !!!!!
தல அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம் இது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் படமாக உள்ளது .இந்த படம் வரும் 10ந் தேதி ரீலிஸ் ஆகும் என்று தயாரிப்பு நிறுவனமே அதிகார பூர்வமாக அறிவித்து விட்டது .இந்த படத்திற்கு புக்கிங் வேலையும் ஆரம்பித்து விட்டது.
ரசிகர்கள் இந்த படத்தின் ரீலிஸ் எப்போது என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில் மேலும் இந்த படத்தின் இரு பாடல்களின் ப்ரோமோ சமீபத்தில் ரீலிஸ் ஆனது . மேலும் ஒரு பாடல் இந்த படத்தில் இருந்து தல அஜித்தின் அட்டகாசமான ஆட்டத்தில் அடிச்சித்தூக்கி பாடல் ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த பாடலில் தல அஜித் வெட்டி சட்டையுடன் அட்டகாசமாக நடனம் ஆடியுள்ளார்.இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது .மேலும் ரசிகர்கள் இந்த பாடலை வீரம் பட பாடலில் உள்ளது போல் உடை அணிந்து தல நடனம் ஆடியுள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளனர் .