வாரிசு படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட்.! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது.

unknown node

Varisu[Image Source: Twitter]

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தை தயாரித்த தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் ”  தமிழ்நாட்டின் நம்பர் 1 ஸ்டாராக நடிகர் விஜய் இருக்கிறார். தமிழகத்தில் துணிவு படத்திற்கு நிகரான திரையரங்கு வாரிசு படத்திற்கு கிடைக்கவில்லை.

இதையும் படியுங்களேன்-போதைப்பொருள் & பணமோசடி வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சம்மன்.!

unknown node

Uthayanithi Stalin [Image Source: Twitter ]

இதனால் தான் சென்னைக்கு சென்று உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நார்த் ஆர்காடு மற்றும் சவுத் ஆர்காடு ஆகிய பகுதிகளில் வாரிசு திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிடுவதாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

unknown node