'தலைவர் 169' : மீண்டும் இணையும் 'பேட்ட' கூட்டணி .? வெளியான சூப்பர் தகவல்.! கொண்டாட ரெடியா.?

It has been reported that actor Rajinikanth will next be seen in his 169th film to be produced by Sun Pictures under the direction of Karthik Supraj.

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 169-வது படத்தினை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது.

ஆனால் அப்போது ரஜினிக்கு உடல்நல குறைவு ஏற்பட அவர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் .இதனால் கடந்த டிசம்பர் பாதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது நடிகர் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தினை கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும்,அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த கூட்டணியில் ஏற்கனவே பேட்ட திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.தற்போது ‘தலைவர் 169’ படத்திற்காக மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கார்த்திக் சுப்பராஜ் தற்போது விக்ரம்-துருவ் விக்ரமை வைத்து படத்தினை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.