அண்ணாத்த தீபாவளிக்கு ரெடியா...??

அண்ணாத்த திரைப்படத்தின் புதிய போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அண்ணாத்த திரைப்படத்தின் புதிய போஸ்டரை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார்.

படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் வருகின்ற நவம்பர் 4-ம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் அண்ணாத்த படத்தில் ரஜினியின் கெட்டப் உடைய போஸ்டரை வெளியிட்டு அண்ணாத்த தீபாவளிக்கு ரெடியா..?? என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

unknown node