"ஏலேலோ " படத்தை மீண்டும் இயக்குகிறார்- நடிகர் பார்த்தீபன்!!!!

பிரபல நடிகரும் இயக்குனருமான  பார்த்தீபன் "ஏலேலோ" என்னும் படத்தை 2001 ஆம் ஆண்டு படமாக்க பல வேலைகளை செய்தார்.ஆனால் இந்த படத்தின் வேலைகள்   பாதியோடு

பிரபல நடிகரும் இயக்குனருமான  பார்த்தீபன் “ஏலேலோ” என்னும் படத்தை 2001 ஆம் ஆண்டு படமாக்க பல வேலைகளை செய்தார்.ஆனால் இந்த படத்தின் வேலைகள்   பாதியோடு நிறுத்தப்பட்டது.

இந்த படம் முற்றிலும் இசையை மையமாக கொண்டு எடுக்கப்படுவதாக இருந்தது.மேலும் இந்த படத்தின்  நான்கு பாடல்களை  ஏ.ஆர் ரஹ்மான் கம்போஸ் செய்து இருந்தார்.மேலும் இந்த படத்தின் வேலைகள்  பாதியோடு  நிறுத்தப்பட்ட காரணத்தினால்  மேலும் பாடல்களை ஏ.ஆர் ரஹ்மானால் இசையமைக்க முடியாமல் போனது.

புத்தாண்டு தினத்தன்று  நடிகர் பார்த்தீபன் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை சந்தித்து இருக்கிறார்.அப்போது ஏ.ஆர் ரஹ்மான் “ஏலேலோ” படத்தை  மீண்டும் நீங்கள் தொடர வேண்டும் என்று பார்த்தீபனை பார்த்துக்கூறியிருக்கிறார்.அதற்கு பார்த்தீபன் மீண்டும் அந்த படத்தை ஆரம்பிப்பதாக தனது ட்விட்டர்  பக்கத்தில் பெருமையாக கூறியுள்ளார்.