தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், எளிமையான முறையில் இவர்களது பெற்றோர் முன்னிலையில், திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
unknown nodeRaveendran And Mahalakshmi [Image Source: Twitter ]
இவர்களது திருமணமத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும் கூட, பலர் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார் என கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்த வந்த இந்த ஜோடி, நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டோம் என்றே கூறிவந்தனர்.
unknown nodeRaveendran And Mahalakshmi [Image Source: Twitter ]
திருமணத்தை தொடர்ந்து இருவரும் ஜாலியாக ஒன்றாக சென்று தங்களது அன்பை பரிமாற்றிக்கொண்டு தினம் தினம் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்கள். கடந்த தீபாவளி இவர்களுக்கு தல தீபாவளி என்பதால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி தீர்த்தனர்.
இதையும் படியுங்களேன்-ஹீரோவோட நண்பன் ரோல் போதும்..சிவகார்த்திகேயன் முடிவால் ஷாக்கான இயக்குனர்.!
unknown nodeRaveendran And Mahalakshmi New Car [Image Source: Twitter ]
இதனையடுத்து, திருமணமாகி 2 மாதங்கள் ஆன நிலையில், இந்த தம்பதி புதிதாக ரூ.35 லட்சத்துக்கு மேல் இருக்கும் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள். அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு ” வாழ்க்க முழுக்க நாம நேசிக்கிற மாதிரி ஒரு நபர் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அப்டி நேசிக்கிற நபர் நமக்கு பொண்டாட்டியா வந்தா… அது பெரிய அதிர்ஷ்டம்.அப்டி நமக்கு கிடச்ச பொண்டாட்டிய கூட்டிட்டு சுத்த சொர்க்கம் மாதிரி ஒரு கார் கிடச்சா…. புதிய மனைவி, புதிய வாழ்க்கை, புதிய கார்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
unknown node