அர்ஜுன் ரெட்டி திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘அனிமல்’ படத்தில், கீதாஞ்சலியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அனில் கபூரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிறகு, ராஷ்மிகாவின் போஸ்டரை இன்று பகிர்ந்துள்ளனர். முதல் பார்வை போஸ்டரில், ராஷ்மிகா சிவப்பு மற்றும் வெள்ளை நிற செக்கப் புடவையில் குறைந்த மேக்கப் உடன் அழகாக தோற்றமளிக்கிறார்.
unknown nodeஇந்த படத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா தவிர அனில் கபூர், பாபி தியோல் மற்றும் ட்ரிப்டி டிம்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படம், வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
கடைசியாக தமிழில் வாரிசு திரைப்படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் மிஷன் மஜ்னு என்ற படத்திலும் நடித்திருந்தார். இரண்டுமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, ரெயின்போ மற்றும் புஸ்பா படத்திலும் நடித்து வருகிறார்.
