விஜய் தேவரகொண்டா மாதிரி கணவர் வேண்டுமா? ராஷ்மிகா போட்ட பதிவு!!

rashmika vijay devarakonda

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாகவே அடிக்கடி வதந்தி பரவுவது ஒன்னும் புதிதான விஷயம் இல்லை. அடிக்கடி வதந்திகள் பரவும் பிறகு இருவருமே விளக்கமும் கொடுத்துவிடுவார்கள். குறிப்பாக கடந்த சில நாட்களு முன்பு இந்த பிப்ரவரி மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

READ MORE- குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க !

அதன்பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா  ” தனிப்பட்ட முறையில் விஜய் என் வாழ்க்கையில் மிகவும் உறுதுணையாக இருந்தவர். சினிமாத்துறையில் எனக்கு கிடைத்த நல்ல நண்பர் அவர் தான்.  திருமண தகவல் எதுவும் உண்மையான விஷயம் இல்லை” என விளக்கம் கொடுத்து இருந்தார்.

READ MORE- சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? 72 வயது அழகனுக்கு ஜோடியாக புதியப்படம்…

இந்த நிலையில், மீண்டும் வதந்தியை கிளப்பும் வகையில் ராஷ்மிகா மந்தனா ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அது என்னவென்றால், ராஷ்மிகாவின் ரசிகர் மன்றத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில் “ராஷ்மிகா மந்தனாவின் கணவராக வருவதற்கு ஒருவர் என்ன குணங்களைக் இருக்கவேண்டும் வேண்டும்?

ராஷ்மிகா இந்தியாவின் நேஷனல் க்ரஷ் அவரது கணவர் அவரைப்போலவே சிறப்பு வாய்ந்தவராக இருக்க வேண்டும். அவங்க கணவர் VD மாதிரி ஒருவராக இருக்கவேண்டும். நாங்கள் ரஷ்மிகாவை  ராணி என்று அழைக்கிறோம், எனவே அவருடைய கணவரும் ஒரு ராஜாவைப் போல இருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்கள். அதற்கு எக்ஸ் வலைதள பக்கத்தில் பதில் அளித்த ராஷ்மிகா ‘இது மிகவும் உண்மை’ என சூசகமாக பதில் அளித்துள்ளார்.

READ MORE- ஏப்ரல் மாசம் தமிழ் சினிமா சம்பவம் தான்! வரிசை கட்டி நிற்கும் திரைப்படங்கள்?

VD என்றால் விஜய் தேவரகொண்டா என்று ரசிகர்கள் அன்புடன் அழைப்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். எனவே, இதனை பற்றிய கேள்விக்கு ராஷ்மிகா  இப்படியான ஒரு பதிலை கூறியிருப்பது இருவரும் காதலிப்பதாக பரவும் வதந்தியை மீண்டும் கிளப்பிவிட செய்து இருக்கிறது. இதனை பார்த்த பலரும் டேட்டிங் வதந்தி உண்மை தானோ என கூறி வருகிறார்கள்.

Rashmika Mandanna tweet
Rashmika Mandanna tweet @Rashmikadelhifc

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்