நடிகர் அஜித் எனக்காக அறிக்கை அனுப்பவில்லை அதிரடி கருத்து – தமிழிசை

நடிகர் அஜித் தமிழ் திரையுலகின் மிக பெரிய நடிகர். படம் நடிப்பதை தவிர வேறு எந்த பிரச்சனைகளுக்கும் போகாமல் அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்க்கும் ஒரு அமைதியான

நடிகர் அஜித் தமிழ் திரையுலகின் மிக பெரிய நடிகர். படம் நடிப்பதை தவிர வேறு எந்த பிரச்சனைகளுக்கும் போகாமல் அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்க்கும் ஒரு அமைதியான நபர். பெரிதாக எந்த விழாக்களிலும் கலந்துகொள்ள மாட்டார்.

கடந்த இரு நாள்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் சேர்ந்தனர். இதனை அடுத்து பாஜகவில் ஒரு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்டு  பாஜக மாநில தலைவர் தமிழிசை நடிகர் அஜித்தை பாராட்டி பேசினார். மேலும் இது குறித்து அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம்  அஜித் அரசியல்  தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அப்போது அந்த அறிக்கையில்  நான் அரசியலுக்கு எப்போதும் வர வாய்ப்பில்லை. எனது ரசிகர்கள்  புகைப்படத்தையும் பெயரையும் எப்போதும்   தவறாக பயன்படுத்தக் கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இது  குறித்து தற்போது பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை இந்த அறிக்கை அஜித் எனக்காக அனுப்பவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.