ராணா டக்குபதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பிளாக் பஸ்டர் படமான பாகுபலியின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டக்குபதி சமீபத்தில் இவர் மிஹீகா பஜாஜ் என்பவரை காதல் செய்வதாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறியிருந்தார். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
அதில் நடிகர்களான நாக சைதன்யா, ராம்சரண், சர்வானந்த் மற்றும் சமந்தா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் . திருமணத்திற்கு முந்தைய தினத்தன்று எடுக்கப்படட்ட ராணா மற்றும் மிஹீகா பஜாஜ் அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து தற்போது அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் பல பிரபலங்கள் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
unknown nodeunknown nodeunknown nodeunknown node