சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் சவுந்தர்யா கடந்த 2010- ஆண்டு அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேத் என்ற ஆண்குழந்தையும் உள்ளது.
unknown nodeபிறகு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அஸ்வினை சவுந்தர்யா விவாகரத்து செய்தார். பிறகு, சவுந்தர்யா கடந்த 2019-ஆம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்களேன்-திருமணம் எப்போது..? மனம் திறந்து பேசிய சிம்பு.!
unknown nodeஇந்நிலையில், தற்போது விசாகன் – சவுந்தர்யா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதை சவுந்தர்யா தன்னுடைய டுவிட்ர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “கடவுளின் அருளுடனும், எங்கள் பெற்றோரின் ஆசியுடனும் விசாகன், வேத் மற்றும் நான் வேதின் சகோதரனை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். செப்டம்பர் 11-ந் தேதி பிறந்த தன் குழந்தைக்கு “வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி” என பெயர் சூட்டி உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
unknown node