எம்ஜிஆர் காலத்தில் வெற்றி கொடி நாட்டிய ரஜினிகாந்த்.! ரசிகர் செய்த காரியத்தால் ஷாக்கான சம்பவம்…

MGR - Shivaji -rajini

நடிகர் எம் ஜி ஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி ஆகியோர் நடித்த சினிமா காலகட்டங்களில் 1970-ல் தனது சினிமா பயணத்தை தொடங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற பட்டத்தை பெற்று இப்பொது ஜொலித்து கொண்டிருக்கும் ரஜினி, எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகத்தை மிஞ்சி தனது வெற்றிக்கொடி நாட்டியவர். அதற்கு காரணம் அவரது நடிப்பு மற்றும் நடை, உடல் பாவனை என அனைத்துமே சொல்லலாம்.

முந்தைய காலகட்டங்களில் எம்ஜிஆருக்கும் ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடு, சண்டைகள் என பல செய்திகள் உண்டு. ஆனால், அது எதுவுமே உண்மை இல்லை என பல சினிமா விமர்சகர்கள் இன்று வரை வாயால் சொல்லி வருகின்றனர். சினிமாவுக்கு வந்த காலகட்டத்தில் ரஜினி பல அவமானங்களை கடந்தும் தமிழ் சினிமாவில் தன்னை ஒரு படி மேலாக நிலைநிறுத்திக் கொண்டார்.

நடிகர் எம்.ஜி.ஆர் கலராக இருந்தாலும் கலரே இல்லாமல் கருப்பு நடிகராக தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் வாழ்ந்தவர் ரஜிகாந்த். ஒரு கருப்பு நாயனாக முதன் முதலாக தனது கால் தடத்தை பதித்தவர் ரஜினிகாந்த். இவருக்கு பிந்தைய காலத்தில் வந்த விஜயகாந்த் மற்றும் முரளி ஆகியோர் ஆகியோருக்கு அடித்தளமாக அமைந்தவர் ரஜினி தான்.

Sarvadhikari : நம்பியாரை வேற லெவலுக்கு கொண்டு சென்ற எம்ஜிஆர்? ‘சர்வாதிகாரி’ பற்றி யாருக்கும் தெரியாத ரகசியம்!

அதுபோல், அவர் பேசும் டயலாக்குகள் கூட சாராம்சமாக எடுத்துக்கொள்ளலாம். அந்த வரிசையில், “ஒரு தடவ சொன்னா நுறு தடவ சொன்ன மாதிரி”, “நான் சொன்னதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன்” என ரஜினிகாந்த் பேசும் டயலாக்குகள் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இது வேறுயாரும் சொன்னனால் எடு படாது, இவர் சொன்னதுனால மட்டுமே ரசிகர்கள் ரசித்து பார்த்தனர். அந்த அளவுக்கு ரஜினி தன்னை வளர்த்து கொண்டார்.

இப்படி இருக்கையில் நடிகர் திலகம் சிவாஜியின் ரசிகர் மன்றம் மதுரை மாநாடுக்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது அவர் ரஜினியும் சிவாஜியும் எதிர்ரெதிரே வருகையில், அங்கு குவிந்திருந்த சிகர்கள் சூப்பர் ஸ்டார் என்றும், வருங்கால முதல்வர் என்று கோஷம் மீட்டனர்.

அப்போது, இவரு முன்னாடி இப்படி சொல்றாங்களே என்று அருகில் வந்தவரிடம் பின்னல் ஒளிந்து கொண்டாராம், இந்த தகவலை AVM பிஆர்ஓ துளசி பழனிவேல் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்