கோல்டன் குளோப் சர்வதேச விருது வென்ற RRR படக்குழுவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த RRR, படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டு நாட்டு எனும் பாடலுக்கு, சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவிலே ஒரு பாடலுக்கு, இந்த விருது கிடைப்பது இதுவே முதல்முறை.
இந்திய அளவில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டரில் RRR படக்குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
எங்களை பெருமையடையவைத்த கீரவாணி மற்றும் ராஜமௌலிக்கு நன்றி என தெரிவித்த ரஜினி, கோல்டன் குளோப் விருதை இந்திய சினிமாவிற்கு கொண்டுவந்ததற்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
unknown node