நடிகை சித்தி இத்னானி சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார் என்றே கூறலாம். அதிலும் இவர் சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும் இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என அன்புடன் அழைத்து வருகிறார்கள்.
unknown nodeஇதனையடுத்து, வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சித்தி இத்னானியிடம் சமீபத்தில், அப்போது அவரிடம் தொகுப்பாளர் ஒருவர் கற்பனை கதை ஏதாவது கூறுமாறு கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சியடையை வைத்துள்ளது.
unknown nodeசித்தி இட்னானி இது தொடர்பாக பேசியது “நானும் சிம்புவும் பள்ளிக்கால காதலர்கள் என் அப்பாவாக ரஜினியும், சிம்புவின் அண்ணனாக உதயநிதியும் இருக்க வேண்டும். இறுதியில் ரஜினியும், உதயநிதியும் இணைந்து எங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும்” என நகைச்சுவையாக கதை ஒன்றை கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன்-4 வருசத்துல 70 படத்தில் ஹீரோயின்.?! நம்ம பார்கவ் அம்மா அப்பவே ரெம்ப பிஸி…
unknown nodeஇதைப்போல ஏற்கனவே ஒரு பேட்டியில் தொகுப்பாளர் ஒருவர் மூன்று ரோஜா பூக்களை கையில் கொடுத்து அதில் ஒன்றை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புபவருக்கு தரவேண்டும் என்பது போல கேள்வி கேட்டிருந்ததற்கு சிம்பு என பதில் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.