ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள்..அனல் பறக்கும் இசை…’ராயன்’ படத்தின் டிரைலர்!

RaayanTrailer

ராயன் : தனுஷ் நடித்து இயக்கியுள்ள ‘ராயன்’ படம்  வரும் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக அறிவித்து இருந்தது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து, படத்திற்கான டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலரில் ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் மற்றும் கவர்ந்து இழுக்கும் வசனங்கள் அத்துடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய பின்னணி இசை அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ஏற்கனவே ‘A’ சான்றிதழ் கொடுத்திருந்தார்கள். “A” சான்றிதழ் கொடுத்தால் கண்டிப்பாக படத்தில் காட்சிகள் 18 வயதுக்கு மேலே இருப்பவர்கள் மட்டும் தான் பார்க்கும் படி இருக்கும். எனவே. ‘A’ சான்றிதழ்  கொடுக்கப்பட்டது போலவே, படத்திலும் அந்த அளவுக்கு காட்சிகள் இருப்பது டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது.

மேலும், இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து துஷாரா விஜயன், சுந்தீப் கிஷன், நித்யா மேனன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இது தனுஷிற்கு நடிகராக 50-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்