அதிர்ச்சி...! ஆர்.ஆர்.ஆர். பட நடிகர் மறைவுக்கு ராஜமௌலி உருக்கம்.!

ஆர்.ஆர்.ஆர். பட நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவுக்கு இயக்குநர் ராஜமௌலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

RayStevensonRIP

ஆர்.ஆர்.ஆர். பட நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவுக்கு இயக்குநர் ராஜமௌலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜமௌலியின் RRR படத்தில் வில்லனாக கவர்னர் ஸ்காட் பக்ஸனாக நடித்த அயர்லாந்து நடிகர் ‘ரே ஸ்டீவன்சன்’ காலமானார். 58 வயதாகும் இவர் இத்தாலியில் உள்ள தனது வீட்டில் இறந்துள்ளார்.

unknown node

Ray Stevenson [Image source :telugubulletin]

இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் ராஜமௌலி இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டார். தனது டிவிட்டர் பக்கத்தில், நடிகர் ரே ஸ்டீவன்சனின் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. அவர் மிகவும் துடிப்பான நபர், அவரின் ஆற்றலை படப்பிடிப்பு தளம் முழுவதும் பரப்பிவிடுவார். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

இந்நிலையில், ஆஸ்கர் விருது வாங்கிய கொண்டாட்டம் அடங்குவதற்குள் ‘RRR’ பட நடிகர் இறந்துள்ளது படக்குழுவினரை கலங்க வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

unknown node

RRR actor Ray Stevenson [Image Source : 123Telugu]