விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியாகி 3 வாரங்கள் கடந்தும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே கொண்டாடாடி வருகிறது. தமிழகத்தில் 150 கோடிக்கு மேல் வசூலும், உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
unknown nodeஇந்த திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக, இதன் வெற்றிவிழா சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
unknown nodeஇதில் சமீபத்தில் வெளியான பான் இந்தியன் படங்களை பற்றி பேசியுள்ளார். அதில் ” புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் ஆகிய படங்களை பார்த்து தமிழ் மக்கள் பொறாமைப்பட்டார்களா என எனக்குத் தெரியாது. நாங்கள் குளிக்கும் குளம் இந்தக் கலையுலகம் தான்.
unknown nodeஎங்களுக்கு மொழி வித்தியாசமே கிடையாது, அதனால் அவர்களுடைய படங்களும் ஜெயிக்கணும். நம்ம படங்களும் ஜெயிக்கணும். தமிழக மக்கள் என் திறமைக்கு அதிகமாகவே என்னைத் தூக்கி கொண்டாடி இருக்கிறார்கள். நல்ல படத்தை மக்கள் ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். எங்கள் நன்றியும் பெருமிதமும் சொல்லி மாளாது” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.