சுல்தான் படத்தின் வெளியீட்டு உரிமை குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!

Warangal Sreenu has reportedly grabbed the Andhra and Telangana state release rights for the film Sulthan.

சுல்தான் படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில வெளியீட்டு உரிமைகளை வாராங்கல் ஸ்ரீனு என்பவர் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில வெளியீட்டு உரிமைகளை வாராங்கல் ஸ்ரீனு என்பவர் கைப்பற்றி உள்ளதாக சுல்தான் பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.விரைவில் சுல்தான் படத்தின் தமிழக உரிமையை வாங்கியது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

unknown node