இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ராட்சசி. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இப்படம் பள்ளி கல்வியின் அவசியத்தையும், அரசு பள்ளிகளில் நிகழ வேண்டிய மாற்றத்தையும் பற்றி கூறியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர், இப்படத்தின் வெற்றி குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, படம் ரிலீசான முதல் நாள் கிடைத்த வசூலை விட, சனிக்கிழமையன்று 40% வசூல் அதிகமாக கிடைத்ததாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த வசூல் இந்த படம் ஹிட்டானதை குறிக்கிறது என்றும், ரசிகர்களை சந்தோஷப்படுத்த நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு நன்றி.” என்றும் பதிவிட்டுள்ளார்.
unknown node