சின்னத்திரையில் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் இன்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodePriya Bhavani Shankar Smile [Image Source: Twitter ]இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலர் யார் என்பதை அறிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னுடைய பிறந்த நாளை நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட ஆண்டு கால காதலரான ராஜ்வேல் ராஜுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
unknown nodePriya Bhavani Shankar [Image Source: Twitter ]
அதற்கான சின்ன வீடியோ ஒன்றையும் ராஜ்வேல் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு விரைவில் உங்களுடைய திருமணம் நடக்கட்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
காதலனுடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியா பவானி சங்கர்.!#PriyaBhavaniShankar | #HBDPriyaBhavaniShankar | #HappyBirthdayPriyaBhavaniShankar | #HBDPBS | #PBS pic.twitter.com/w7ZI3iO5MM
— CineBloopers (@CineBloopers) December 31, 2022
மேலும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இந்தியன் 2, பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பத்து தல திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.