கல்லூரி நடன நிகழ்ச்சியில் மாணவர்களுடன் சேர்ந்து வேதாளம் படத்தில் இடம் பெற்ற “ஆலுமா டோலுமா” பாடலுக்கு நடனமாடினார்.
நடிகை ப்ரியா பவானி ஷங்கர் விஜய் டி.வியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” சீரியல் மூலம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தார். அதன் பின்பு இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான “மேயாத மான் ” திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படம் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பும் ,பாராட்டுகளையும் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடித்து உள்ளார்.
தற்போது “குருதி ஆட்டம்” , ” மான்ஸ்டர் ” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரியா பவானி.
கல்லூரி நடன நிகழ்ச்சியில் மாணவர்களுடன் சேர்ந்து வேதாளம் படத்தில் இடம் பெற்ற “ஆலுமா டோலுமா” பாடலுக்கு நடனமாடினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://media.dinasuvadu.com/uploads/2019/03/56420652_408687533275820_6968771754168680448_n.mp4