விஷாலுடன் மூன்றாவது முறையாக நடிகர் பிரபு இணைந்து நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக வலம் வரும் விஷால் தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கான டப்பிங் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 32-வது படத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுவென நடந்து வருகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அசோக் என்பவர் இயக்குகிறார். நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார்.
unknown nodeஇப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். சமர் படத்தை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு விஷாளுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடிகர் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இதற்கு முன்பு விஷாலுடன் தாமிரபரணி, ஆம்பள ஆகிய படங்களில் பிரபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.