Salaar Postponed: பிரபாஸின் 'சலார்' திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷன் தாமதத்திற்குப் பிறகு இப்போது அதன்

Featured image

சலார் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷன் தாமதத்திற்குப் பிறகு இப்போது அதன் ரிலீஸ் தேதி  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இந்த படத்தை செப்டம்பர் 28 அன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டது.

ஆனால், கடந்த சில வாரங்களாக, ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக ஒரு தகவல் பரவியது. அதன்படி, செப்டம்பர் 13 இன்று, தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் இறுதியாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

unknown node

salaar (Photo: @hombalefilms)

அதன்படி, படக்குழு வெளியிட்ட ஒரு சிறப்பு போஸ்டரில் , ஹோம்பலே பிலிம்ஸ் எழுதியது, எதிர்பாராத சூழ்நிலைகளால் செப்டம்பர் 28 வெளியீட்டை ஒத்திவைத்துள்ளோம். ஒரு விதிவிலக்கான சினிமா அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளளோம், இதனால் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘சலார்’ நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.