'பவர் ஸ்டார்' சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.!

Actor Srinivasan has been admitted to hospital due to sudden illness.

நடிகர் சீனிவாசன் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு லத்திகா எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சீனிவாசன் .பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவரது நடிப்பை கலாய்த்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் கண்ணா லட்டு தின்ன ஆசையா,கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நடிகர் சீனிவாசன் உடல்நல குறைவு காரணமாக சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,அங்கு அவருக்கு கொரோனா‌ தொற்று இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையும் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.