சென்னையில் அதிக அளவு பார்வையாளர்களை அனுமதித்த பிரபல திரையரங்கு! ரூ.5,000 அபராதம்!

Kasi Theater in Ekkaduthangal, Chennai, fined Rs 5,000 for allowing too many fans in defiance of government order

சென்னை ஈக்காட்டுதாங்லில் உள்ள காசி தியேட்டரில் அரசின் உத்தரவை மீறி அதிக ரசிகர்களை அனுமதித்ததால், ரூ.5,000 அபராதம் விதிப்பு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை காண திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகமாக கூடினர். பல மாதங்களுக்குப் பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், சென்னை ஈக்காட்டுதாங்லில் உள்ள காசி தியேட்டருக்கு இப்படத்தை பார்க்க அரசின் உத்தரவை மீறி அதிக ரசிகர்களை அனுமதித்துள்ளனர். இதனையடுத்து, எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர.

இந்நிலையில், காசி தியேட்டருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமீறும் திரையரங்குகள் மீது வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர்.