மங்களகரமாக நடந்து முடிந்தத 'தலைவர் 170' திரைப்படத்தின் பூஜை!! வைரலாகும் பூஜை க்ளிக்ஸ்...

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தற்காலிகமாக 'தலைவர் 170' என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா

Thalaivar 170 poojai

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, ஃபஹத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் உள்ளது.

இப்படம் திருவனந்தபுரத்தில் இன்று பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் டி.ஜே.ஞானவேல், நடிகை மஞ்சு வாரியர், வி.ஜே ரக்ஷன் ஆகியோருடன் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், மேக்கப் கலைஞர் ரஷீத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தற்போது, படக்குழுவினர் பூஜையின்போது எடுக்கப்பட்டபுகைப்படங்களைவெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, ரஜினிகாந்த் முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். 2024 பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.