தளபதி 65 படத்திற்காக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்த பூஜா ஹெக்டே.!!

Actress Pooja Hegde has reportedly given a 50-day call sheet for Commander 65

நடிகை பூஜா ஹெக்டே  தளபதி 65 படத்திற்காக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்

மாஸ்டர் படம் 50 நாட்களுக்கு மேலாக இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கான பூஜை இந்த மாதம் நடைபெறும் என்றும் ஏப்ரல் அல்லது மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் ரஷ்யாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு 60 நாட்கள் நடக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே  50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.