தளபதி விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே..??

It has been reported that actress Pooja Hegde will be paired with Surya in the next film

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்.

நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை முடித்து விட்டு அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆம், இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து அண்ணத்தா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற ஜூலை மாதத்தில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை முடித்து விட்டு நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யாவை வைத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே தமிழில் விஜய்யின் 65 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.